விவசாய காதல் கதை part 3

 




வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 3

மிருனாழினி : அஞ்சலி கூட அவ ஊருக்கு போலாமா வேண்டாமானு யோசிச்சிட்டு இருந்தா...


அர்ஜுன் : மிரு இன்னும் வரலையேனு அவ ரூம்க்கு வந்தான்...


 

மிருனாழினி : அவன் வந்தது கூட தெரியாம யோசிச்சிட்டு இருந்தா...


அர்ஜுன் : அவ தலைல கொட்டுனான்...


மிருனாழினி : ஆஆஆ அர்ஜு எரும ஏன்டா கொட்டுன...


அர்ஜுன் : நான் வந்தது கூட தெரியாம மேடம் அப்படி என்ன யோசனைல இருக்கீங்க...


மிருனாழினி : அஞ்சலி கால் பண்ணிருந்தா...


அர்ஜுன் : வாவ் சின்ரல்லா என்ன சொன்னா 😍😍😍


மிருனாழினி : அது என்ன சின்ரல்லா...


அர்ஜுன் : அதை விடு ஏன் கால் பண்ணா அதை சொல்லு...


மிருனாழினி : அதை அப்பறம் சொல்லுறேன் இப்போ ஏன் நீ அவளை சின்ரல்லானு சொன்ன அதை முதல்ல சொல்லு...


அர்ஜுன் : அவ இயற்கைலயே ரொம்ப அழகு தெரியுமா அவளுக்கு எந்த மேக்கப்பும் தேவை இல்ல முகம் கழுவி பவுடர் அடிச்சாலே அவ்ளோ அழகா இருப்பா...


 

😍😍😍 அவளோட அந்த லாங் ஹேர் இருக்கே அவ்ளோ அழகா இருக்கும் மயில் தோகை மாதிரி...


 

அவ புருவத்தை த்ரெட்டிங் எல்லாம் பண்ணா வேண்டா அழகா வில் மாதிரியே இருக்கும்.. கண்ணுக்கு மை வச்சா இன்னும் அழகா இருக்கும்.. அவ லிப் இருக்கே அப்படியே ரோஜா இதழ் மாதிரி இருக்கும்...


அர்ஜுன் எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டு மிருவ பார்த்தான்...


மிருனாழினி : 😳😳😳 அவனையே பே னு பார்த்துட்டு இருந்தா...


அர்ஜுன் : 😄 ஹேய் என்ன டி இப்படி பார்க்குற...


மிருனாழினி : இந்த கதைல ஹீரோயின் நானா இல்ல அவளானு சந்தேகம் வந்துடுச்சி டா...


அர்ஜுன் : சந்தேகமே வேண்டா நீ முதல் ஹீரோயின் அவ இரண்டாவது அவ்ளோ தான்...


மிருனாழினி : அர்ஜு நீ அவளை லவ் பண்ணுறியா டா...


அர்ஜுன் : ச்ச ச்ச நான் எப்போதும் சிங்கிள் தான்...


மிருனாழினி : அவ என் கூட படிச்ச இந்த மூனு வருஷத்துல ஒரு 5,6 தடவை தான் பார்த்திப்ப அப்பறம் எப்படி இந்த அளவு ரசிச்சி சொல்லுற...


அர்ஜுன் : நான் லவ் பண்ணலனு தான் சொன்னேன் சைட் அடிக்கலனு சொல்லலையே...


மிருனாழினி : அடப்பாவி ( அவனை போட்டு அடிச்சா)


அர்ஜுன் : அடியே அடிக்காத டி நான் உன் அண்ணன்...


மிருனாழினி : போ டா எரும...


அர்ஜுன் : சரி அவ ஏன் கால் பண்ணா...


மிருனாழினி : அவ ஊருக்கு போறாளாம் என்னையும் கூப்பிடுறா..


அர்ஜுன் : அவ கிராமத்துல இருந்து வந்தவ தான...


மிருனாழினி : ஆமா தஞ்சாவூர் பக்கத்துல எதோ ஒரு கிராமம்...


அர்ஜுன் : ஹேய் அப்போ போலாம் மிரு நானும் வரேன்...


மிருனாழினி : நீ ஏன்...


அர்ஜுன் : ஹேய் மிரு தஞ்சாவூர் டெல்டா மாவட்டம் டி எங்க பார்த்தாலும் பச்ச பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்... கிராமத்துல பொண்ணுங்க எல்லாம் பாவாடை, தாவணி போட்டு அழகா இருப்பாங்க தெரியுமா...


மிருனாழினி : சோ நீ சைட் அடிக்க தான் வர...


அர்ஜுன் : எஸ் ஆஃப்கோர்ஸ்...


மிருனாழினி : அஞ்சலியோட அப்பா அந்த ஊர் பஞ்சாயத்து தலைவராம் நீ அவளை சைட் அடிச்சதை மட்டும் சொன்னேனு வச்சிக்க உன்னை மரத்துல கட்டி வச்சி தோளை உறிச்சிடுவாரு...


அர்ஜுன் : அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம் இப்போ அப்பா, அம்மா வெய்ட் பண்ணுறாங்க வா...


மிருனாழினி : ம்ம்ம் போலாம் அர்ஜூ...


அப்பறம் நாலு பேரும் சேர்ந்து வெளில போனாங்க... மிரு நல்லா என்ஜாய் பண்ணா...


அர்ஜுன் மிருனாழினிய விட ஒரு வயசு பெரிய பையன் அவனும் இப்போ தான் இன்ஜினியரிங் 4 வருஷம் படிச்சி முடிச்சான்... மிருனாழினி, அஞ்சலி B. Com 3 வருஷம் படிப்பு முடிச்சிட்டாங்க...


 

அர்ஜுன்க்கு அவங்க அப்பா பிஸ்னஸ்ஸ பார்த்துகனும்னு ஆசை ஆனா இப்போ மிரு ஊருக்கு போறதால அவள தனியா விட மனசு இல்லாம அவனும் கூட போக போறான்...


 

அவ மைண்ட் ரிலாக்ஸ்காக தான் அவளை அஞ்சலி கூட ஊருக்கு போக சொன்னான் ஆனா அவளை தனியா அனுப்பவும் பயம் அதான் அவனும் சேர்ந்து போக போறான் அதனால மிரு அவ பெரியப்பா, பெரியம்மா கிட்ட பர்மிஷன் வாங்கி அஞ்சலிக்கும் கால் பண்ணி சொல்லிட்டா...


அவ அப்பா, அம்மாக்கு கால் பண்ணா எடுக்கல சோ  ஃப்ரண்டு வீட்டுக்கு போறேனு மெசேஜ் மட்டும் பண்ணா...


ஒரு வாரத்திற்க்கு பிறகு,


அஞ்சலி : அவ ஹாஸ்ட்டல் முன்னாடி ஒரு பேக் வச்சிட்டு மிருக்காக வெய்ட் பண்ணிட்டு  இருந்தா அவளுக்கு அர்ஜுன் வரது தெரியாது...


அப்போ அவ முன்னாடி ஒரு கார் வந்து நின்னுச்சி...


மிருனாழினி : ஹேய் அஞ்சு ஏறு டி...


அஞ்சலி : பின் சீட்ல மிரு கூட உட்கார்ந்தா...


அர்ஜுன் : முன் சீட்ல உட்கார்ந்து இருந்தான்...


அஞ்சலி : மிரு இவர் யாரு டி...


மிருனாழினி : டேய் அர்ஜூ உன்னை பார்த்து யாருனு கேட்குறா டா ( முன் சீட்ல தாவி அவன் காதுல ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னா)


அர்ஜுன் : 😠 என் காதுலயும் விழுந்தது போ டி அந்த பக்கம் ( அவ தலைல தட்டுனான்)


 

மிருனாழினி : அவன் அர்ஜுன் டி என் அண்ணன் மறந்துட்டியா...


 

அஞ்சலி : ஓஓஓ சாரி டி பார்த்து ரொம்ப நாள் ஆகுது அதான்...


அப்படியே பேசிட்டே பஸ் ஸ்டாண்ட் வந்த தொடரும்..... ு

கருத்துரையிடுக

புதியது பழையவை