வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 1
தஞ்சாவூரை அடுத்த ஒரு அழகான கிராமம் அங்க தான் நம்ம ஹீரோ இருக்காரு முதல்ல ஹீரோ பத்தி பார்த்துடலாம் ரீடர்ஸ்...
ஹீரோ பெயர் தமிழ்செல்வன் எல்லாரும் தமிழ்னு கூப்பிடுவாங்க, மாநிறம், நல்லா உயரமா இருப்பான், எந்த வித உடற்பயிச்சியும் இல்லாம வயல்லயே வேலை செஞ்சி முறுக்கேறிய உடம்புல பார்க்க கம்பீரமா இருப்பான்...
+2 வரை தான் படிச்சான் அதுக்கு பிறகு விவசாயம் பண்ண ஆரம்பிச்சிட்டான்...
விடியற்காலை 5 மணி,
காலைலயே ரேடியோல ஒலிச்ச சுப்ரபாதம் சத்தம் கேட்டு எழுந்தான் தமிழ்... எழுந்ததும் கொல்லை புரம் போய் பல்விலக்கிட்டு தலைல முண்டாசு மாதிரி துண்டை கட்டிட்டு ஒரு பால் கேன், ஒரு சொம்பு எடுத்துட்டு மாட்டு கொட்டகைக்கு போனான்...
அங்க இரண்டு பசுமாடு, இரண்டு கன்றுகுட்டி அப்பறம் இரண்டு வண்டி மாடு இருந்தது...
கன்றுகுட்டிய அவிழ்த்து விட்டு இரண்டு பசுமாடு கிட்டயும் பால் கறந்து பால்கேன்ல ஊத்தி வச்சிட்டு வீட்டுக்கு தேவையான பால்ல சொம்புல எடுத்துட்டு வீட்டுக்குள்ள போனாங்க...
அங்க அவனோட அம்மா மகாலெட்சுமி குளிச்சிட்டு முகத்துக்கு மஞ்சள் பூசி பெரிய பொட்டு வச்சி நெத்திலயும் வகுடுலயும் குங்குமம் வச்சி மங்கள கரமா அவன் முன்னாடி வந்தாங்க...
தமிழ் செல்வன் : அம்மா இந்தாங்க பால்...
லெட்சுமி : குளிச்சிட்டு வா ராசா நான் காபி போட்டு வைக்குறேன்...
தமிழ் செல்வன்: சரிங்க மா...
லெட்சுமி பால்ல சமையல்கட்டுல வச்சிட்டு பூஜை அறைக்கு போய் சாமி கும்பிட்டு வீடு முழுக்க சாம்பிராணி காட்டி தீபாராதனை காட்டும் போது தமிழும் குளிச்சிட்டு அங்க வந்தான்...
லெட்சுமி : அவன் நெத்தில விபூதி வச்சி ஊதி விட்டாங்க..
தமிழ் செல்வன் : ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா ( அவங்க காலுல விழுந்தான்)
லெட்சுமி : எந்த குறையும் இல்லாம சந்தோஷமா இருப்பா...
" நாங்களும் இங்க தான் தமிழ் இருக்கிறோம் " சொல்லிட்டே தமிழோட தாத்தாவும் ஆச்சியும் வந்தாங்க...
தமிழ் செல்வன்: அவங்க இரண்டு பேர் காலுலயும் விழுந்தான்...
தாத்தா, ஆச்சி மாமி: நல்லா இரு பா...
அந்த நேரம் தமிழோட அப்பா தேவேந்திரன் மீசைய முறுக்கிட்டே அங்க வந்தாரு...
தமிழ் செல்வன்: அப்பா ஆசிர்வாதம் பண்ணுங்க ( அவர் காலுல விழுந்தான்)
தேவா : நல்லா இரு பா...
தமிழ் எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு எங்க போறானு யோசிக்காதீங்க ரீடர்ஸ் இது டெய்லி அவங்க வீட்டுல நடக்குற நிகழ்வு தான்...
அப்பறம் தேவேந்திரன், மகாலெட்சுமி தமிழோட தாத்தா, பாட்டி காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாங்க...
எல்லாம் முடிஞ்சி தாத்தா, ஆச்சி, தேவேந்திரன், தமிழ் கூடத்துல போய் உட்காரவும் மகாலெட்சுமி காபி கொண்டு வரவும் சரியா இருந்தது...
எல்லாரும் ஒன்னா சேர்ந்து காபி குடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க...
லெட்சுமி : சமைக்க போய்ட்டாங்க...
தாத்தா : ஏன் பா தேவேந்திரா இன்னைக்கு எதாவது பஞ்சாயத்து இருக்கா...
தேவா : ( அவர் தான் இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்) இல்ல பா...
தாத்தா : தமிழ் உனக்கு...
தமிழ் செல்வன்: வயல்க்கு போனும் தாத்தா அங்க கொஞ்சம் வேலை இருக்கு...
தாத்தா : அடுத்த வாரம் என் பேத்தி அஞ்சலி வரா டா அதுக்குள்ள அவ ரொம்ப நாள் கேட்டுட்டே இருக்க ஸ்கூட்டிய வாங்கி வச்சிடுங்க பா புள்ள ஒரு வருஷத்துக்கு அப்பறம் ஊருக்கு வரா வந்ததும் அந்த வண்டிய பார்த்து சந்தோஷப்படனும்...
தேவா : அப்பா நீங்க கவலையே படாதீங்க தமிழ் டவுனுக்கு போய் அதுக்கான ஏற்பாடு பண்ணிட்டான் நாளைக்கு நம்ம வீட்டு வாசல்ல வண்டி வந்து நிக்கும் பாருங்க...
தாத்தா : ரொம்ப சந்தோஷம் பா தமிழு அஞ்சலி வந்த பிறகு தான் நம்ம வீடு கல கலனு இருக்க போது...
ஆச்சி மாமி : இதுக்கு தான் என் பேத்தி இங்கயே இருக்கட்டும்னு சொன்னேன் யாராவது கேட்டீங்களா, அவளை மெட்ராஸ்ல படிக்க அனுப்பிட்டு இப்போ அவளுக்காக ஏங்கிட்டு இருக்கோம்...
தமிழ் செல்வன்: ஆச்சி அவ இங்கயே இருந்தா வெளி உலகம் தெரியாமலே போய்டுவா வெளியூர் போய் படிச்சி நாலு பேர் கூட பழகுனா தான் அவளுக்கும் தைரியம் வரும்...
ஆச்சி மாமி : அவ உன்னோட தங்கச்சி தமிழ் அவளுக்கு அந்த ஒரு தைரியம் பத்தாதா...
தமிழ் செல்வன் : சரி விடுங்க ஆச்சி அவ தான் படிப்ப முடிச்சிட்டாலே இனிமேல் கல்யாணம் பண்ணி போற வரை அவ உங்க கூட தான் இருக்க போறா அப்பறம் ஆசை திற அவளை கொஞ்சிக்கோங்க...
தாத்தா : சரி விடு பா இவ தான் தேவை இல்லாம புலம்புறானா நீயும் பதில் சொல்லிட்டு இருக்க...
தமிழ் செல்வன் : சரி நான் வயலுக்கு போறேன்...
மகாலெட்சுமி : கரண்டியோட சமையல்கட்டுல இருந்து வெளில வந்தாங்க " தமிழ் சாப்பிட வந்துடுவல ".
தமிழ் செல்வன்: வருவேன் மா...
லெட்சுமி : சரி பா...
தமிழ் வீட்டுக்கு சைடுல உள்ள செட்ல ட்ராக்டர், மாட்டு வண்டி, கார், ஜீப், புல்லட் பைக், சைக்கிள் கூட இருந்தது...
இவ்ளோ வண்டி இருந்தும் வயல் கொஞ்ச தூரத்துலயே இருக்கிறதால எதையும் எடுக்காம நடந்தே போய்ட்டான்...