விவசாய காதல் கதை part 2


வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 2
நம்ம ஸ்டோரியோட ஹீரோயின் பெயர் மிருனாழினி...😊

மிருனாழினி செம்ம அழகா இருப்பா வொய்ட் ஸ்கின், நார்மல் ஹைட், மீடியம் சைஸ் ஹேர், பிடிச்சவங்க கிட்ட மட்டும் அதிகமா பேசுவா ஒருத்தவங்களை பிடிக்கலனா அவங்களை சுத்தமா வெறுத்துடுவா...

பணக்கார வீட்டை சேர்ந்தவ அப்பா, அம்மா எப்போதும் பிஸ்னஸ் பிஸ்னஸ்னே போய்டுவாங்க... கூட பிறந்தவங்க யாரும் இல்ல... வீட்டுல பணம் இருக்கிற அளவுக்கு பாசம் காட்ட யாரும் இல்ல...


 
மிருனாழினி : காலைல கண்ணை கசக்கிட்டே  எழுந்திரிக்குறா...


 
அவ அப்பா, அம்மா இங்க இல்ல பிஸ்னஸ் விஷயமா வெளிநாடு போய்ருக்காங்க...

அவ மொபைல் எடுத்து பார்க்குறா மொபைல் சைலண்ட்ல இருக்க அவளுக்கு அவ ஃப்ரண்ட்ஸ் பெரியப்பா, பெரியம்மா அவங்க பையன் அர்ஜுன் கிட்ட இருந்து நிறைய கால்ஸ் அண்ட் மெசேஜ் வந்திருக்கு...

எல்லாரும் அவ பர்த்டேக்கு விஷ் பண்ணி மெசேஜ் பண்ணிருக்காங்க... ஆனா அவ எதிர் பார்த்த அவ அப்பா, அம்மா கிட்ட இருந்து ஒரு கால், மெசேஜ் கூட வரல...


 
😖😖😖 எதுக்காக பிறந்தோம்னு அவ பிறந்த நாள் அன்னைக்கே யோசிக்க வைக்குற நிலைமை தான் அவளோடது...

 
மிருனாழினி : 😖😖😖 மொபைல்ல விஷ் பண்ண எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டு இருந்தா...

அந்த நேரம் அவ ரூம் கதவை திறந்துட்டு அவ பெரியப்பா, பெரியம்மா, அர்ஜுன் வந்தாங்க...

மூனு பேரும் முதல்ல அவளுக்கு விஷ் பண்ணாங்க அவளும் தேங்க்ஸ் சொல்லிட்டு பேச ஆரம்பிச்சா...

பெரியப்பா : மிரு குட்டி இன்னும் பெட் விட்டு எழுந்திரிக்கலையா டா ( அவ பக்கத்துல உட்கார்ந்து அவ தலை முடிய கோதி விட்டுட்டே கேட்டாரு)

மிருனாழினி : இப்போ தான் பெரியப்பா எழுந்தேன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் விஷ் பண்ணிருந்தாங்கலா அதான் ரிப்ளே பண்ணிட்டு இருக்கேன்..

பெரியம்மா : போய் குளிச்சிட்டு வா டா கோவிலுக்கு போலாம்...

மிருனாழினி : 😖😖😖 போறேன் பெரியம்மா...

அர்ஜுன் : மிரு மா ஏன் பிறந்தநாள் அதுவுமா சோகமா இருக்க...

மிருனாழினி : 😢😢😢 கண்ணுல கண்ணீரோட அவனை பார்த்தா...

அர்ஜுன் : மிரு என்னனு சொல்லு டி...

மிருனாழினி : நிறைய பேர் விஷ் பண்ணிருக்காங்க ஆனா அப்பா, அம்மா கிட்ட இருந்து ஒரு கால், மெசேஜ் கூட இல்ல அர்ஜு... அவங்களுக்கு என் பிறந்தநாள் கூட நியாபகம் இல்ல 😭😭😭

பெரியப்பா : மிரு குட்டி அழாத டா அதான் நாங்க இருக்கோம்ல...

மிருனாழினி : அவங்களுக்கு என் மேல பாசமே இல்ல பெரியப்பா ( அர்ஜுன் மடில படுத்து அழ ஆரம்பிச்சிட்டா)


பெரியப்பா : அவ ரூம் விட்டு வெளில போய் அவரோட தம்பி ( மிரு அப்பா) க்கு கால் பண்ணி நல்லா திட்டிட்டாரு...

இவர் பேசி முடிச்சதும் மிரு அப்பா மிருனாழினிக்கு கால் பண்ணாரு...

மிருனாழினி : அவ மொபைல் பார்த்துட்டு அவ பெரியப்பாவ பார்த்தா...

பெரியப்பா : பேசு டா...

மிருனாழினி : ( மொபைல் அட்டன் பண்ணா) ஹலோ டேடி..

மிரு அப்பா : ஹேப்பி பர்த்டே ஸ்வீட்டி...

மிருனாழினி : தேங்க்ஸ் டேடி...

மிரு அப்பா : உன் அக்கவுண்ட்ல மனி ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டேன் டா என்ன வேணாலும் வாங்கிக்க...

மிருனாழினி : அதெல்லாம் வேண்டா டேடி நீங்களும் மம்மியும் தான் வேணும் எப்போ வருவீங்க...

மிரு அப்பா : இன்னைக்கு வர முடியாது டா நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல புரிஞ்சிக்காம இருக்க இந்த மீட்டிங் அட்டன் பண்ணலனா நமக்கு நிறைய லாஸ் ஆகிடும் அம்மா அதுக்காக தான் பிரிபேர் பண்ணிட்டு இருக்கா நான் அப்பறமா பேசுறேன் ( அவ பதில் கூட எதிர் பார்க்காம கட் பண்ணிட்டாரு)

மிருனாழினி : 😖😖😖 மூனு பேரையும் பாவமா பார்த்தா...

பெரியப்பா : நீ குளிச்சிட்டு வா டா நாம வெளில போலாம்... நான் ஹால்ல இருக்கேன் வாங்க...

பெரியம்மா : இதுல புது ட்ரெஸ் இருக்கு போட்டுட்டு வா டா நான் உனக்கு புடிச்ச கேரட் அல்வா பண்ணுறேன்...

மிருனாழினி : ம்ம்ம்...

அர்ஜுன் : எதையும் நினைக்காம சீக்கிரம் கிளம்பி வா இன்னைக்கு வெளில போறோம் ஃபன் பண்ணுறோம் சரியா...

மிருனாழினி : சரி...

பாத்ரூம் போய்ட்டு ஷவர் ஓபன் பண்ணி அதுக்கும் கீழ நின்னா அவளோட கண்ணீர் எல்லாம் தண்ணியோட காணாம போய்டுச்சி...

இதுவரை இருந்த சோகம் எல்லாத்தையும் மறைச்சிட்டு அவளுக்காக வந்துருக்க அவ பெரியப்பா, பெரியம்மா, அர்ஜுன்காக முகத்தை சந்தோஷமா வச்சிட்டு ட்ரெஸ்ஸிங் ரூம் போய் அவ பெரியம்மா குடுத்த பிங்க் அண்ட் கோல்டன் கலந்த லாங் சுடிய போட்டுட்டு வந்தா...

அவ ஃபோன் விடாம அடிச்சிட்டே இருந்தது அட்டன் பண்ணி காதுல வச்சா...

       : அடியே மிரு நைட் 12 மணில இருந்து ஒருத்தி கால் பண்ணுறாளே எடுத்து பேசுவோம்னு கொஞ்சமாவது அக்கரை இருக்கா... எவ்ளோ மெசேஜ், எவ்ளோ கால் ஒன்னுத்துக்குமே பதில் இல்ல... ஏன்னை பார்த்தா உனக்கு எப்படி டி தெரியுது ( மூச்சு விடாம அந்த பக்கத்துல இருந்து கோவமான வார்த்தைகளா வந்துச்சி)

மிருனாழினி : அஞ்சு செல்லம் ரிலாக்ஸ் டி...

அஞ்சலி : என்னா டி அஞ்சு, ஆ

கருத்துரையிடுக

புதியது பழையவை